தலைவர் திரைப்படத்தை முடித்த பிறகு.. லோகேஷின் அடுத்த பிளான் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான்.! இதோ மரண மாஸாக அறிவித்த லோகேஷ்..

lokesh next movie 2nd part

Lokesh next movie after thalaivar 171 : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக உருமாறி வருகின்றன. அந்த வகையில் மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் சாயலில் உருவாகியுள்ளது.

லோகேஷ் படத்தில் கமல் ரஜினி.? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

சமீபத்தில் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்வரவேற்பு பெற்றது. அந்த ட்ரெய்லரை பார்த்தாலே தெரியும் முழுக்க முழுக்க லோகேஷ் சாயலில்  உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இசை வெளியீட்டு விழா நடத்தாததற்கு காரணத்தை கூறியிருந்தார. அது மட்டும் இல்லாமல் பிரியாணி காட்சி லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது எனவும் வெளிப்படையாக கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் விஜய் இந்த திரைப்படத்தில் டூப்  போடாமல் பல ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருந்தார் எனக் கூறினார்.

kaithi 2
kaithi 2

இந்த நிலையில் தொகுப்பாளினி  லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினர். அதாவது லியோ 2  வாய்ப்பு இருக்கிறதா என கேட்டதற்கு அப்படி சொல்ல முடியாது விஜய் அண்ணா கூப்டா கண்டிப்பா எடுத்து தான் ஆகணும் வேற வழி இல்ல என்பது போல் பேசினார். பிறகு தொகுப்பாளினி கைதி 2ம் பாகம், லியோ 2ம் பாகம், விக்ரம் 2 ம் பாகம் இதில் எதை நீங்கள் அடுத்து எடுக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

ரஜினியின் இந்த திரைப்படம் தான் லோகேஷ் க்கு பிடிக்குமா.! ஒருவேளை தலைவர் 171 மெஹா ஹிட் திரைப்படத்தின் இரண்டாவது பாகமா.?

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் திரைப்படம் இருக்கிறது. அதனை முடித்த பிறகு, அடுத்த பிளான் கைதி 2 தான், இந்த ரெண்டும் தான் ஃபர்ஸ்ட் என்னுடைய லிஸ்ட்ல இருக்கு என லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேசி உள்ளார். அதனால் தலைவர் நூத்தி எழுவத்தி ஒன்னாவது திரைப்படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் இதனை அந்த பேட்டியில் அவரே கூறியுள்ளார்.