jawan movie :தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த இவர் திடீரென ஹிந்தி பக்கம் தாவீ டாப் ஹீரோ ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் எடுத்து வந்தார்.
படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து சானியா கோத்ரா, நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு, விஜய் சேதுபதி, பிகில் தென்றல் என பல திரைப்பட்டாளங்கள் நடித்து வந்தனர் படத்தின் படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நேற்று கோலாகலமாக படத்தின் டிரைலரும் வெளியானது.
ஒவ்வொரு காட்சியும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது மேலும் நயன்தாராவின் ஆக்சன் மற்றும் அவருடைய லுக்கு பெரிய அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரைலர் கலவையான வரவேற்பு பெற்று வருகிறது.
ஷாருக்கான் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த பதான் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது தொடர்ந்து இந்த படமும் ஹிட் அடிக்கும் என பலரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் டிரைலரை பார்த்த லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் twitter பக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அதில் அவர் சொன்னது.. ஜவான் உலகம் ஸ்டன்னிங்காக உள்ளது.
சகோதரர்கள் அட்லீயும், அனிருத்தும் சிறப்பாக ஹிந்தியில் அறிமுகமாகியுள்ளனர். விஜய் சேதுபதியின் லுக் எப்பொழுதும் போல பிரமிக்க வைக்கிறது மேலும் பேசிய லோகேஷ் கனகராஜ் ஜவான் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
ஜவான் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும்.. அட்லீ வழக்கம் போல பல படங்களில் இருந்து ஒவ்வொரு லுக்கையும் உருவி ஜவான் வைத்து உள்ளார் என விமர்சித்து வருகின்றனர் இந்த நிலையில் லோகேஷின் பதிவை பார்த்த பலரும் இவர் புகழ்கிறாரா அல்லது மறைமுகமாக விமர்சிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.