சினிமாவுலகில் அசிஸ்டன்ட் இயக்குனராக கால்தடம் பதித்து பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு தற்போது சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை வெளிக்காட்டும் விதமாக படங்களை கொடுத்து வருவதால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார் இயக்குனர் அட்லி.
இவர் தமிழில் பல நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தொடர்ந்து தற்போது ஹிந்தியில் டாப் ஹீரோ என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு ஒரு படத்தைக் கொடுக்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருக்க சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் புதிதாக இயக்கும் படத்தில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியவர்களை வைத்து உருவாகும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருந்தார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்படியே விருமாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே இருந்ததால் ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர் மேலும் சினிமாவில் காப்பி அடிப்பது என்றாலே முதலில் நம் நினைவிற்கு வரும் பெயர் இயக்குனர்அட்லீ தான். இப்பவும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்பார்த்த வுடன் லோகேஷ் கனராஜ் இயக்குனர் குறிவைக்காமல் ரசிகர்கள் மாறாக அட்லீயை குறிவைத்து காலாய்த்து வருகின்றனர்.
அட்லீ பல்வேறு திரைப்படங்கள் எடுத்து ஹிட் கொடுத்து இருந்தாலும் அந்த படங்கள் பழைய படத்தின் காப்பி என்பதால் ரசிகர்கள் பல ஆதாரங்களை வெளியிட்டு அவரை சிக்க வைத்த னர் மேலும் பல பேட்டிகளில் அவரே மறைமுகமாக பெற்றுக் கொண்டும் உள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போயிட்டு ரசிகர்கள் அவருக்கு மீம்ஸ் போட்டு உள்ளனர் அதாவது யார் யாரோ எதை பெரிசா எடுத்துக்க மாட்டீங்க ஆனால் நான் பண்ணா மட்டும் வச்சி செய்கிறார்கள் என்பது போல மீம்ஸ் ஒன்று இரசிகர்கள் கிரியேட் செய்து தற்போது சமூக வலைதள பக்கத்தில் சேர் செய்தனர் இச்செய்தி தற்போது சமூக வலைதள பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி கொண்டிருக்கிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.