கேரளாவில் லியோ படத்திற்கு அமோக வரவேற்பு.. கூட்டத்தில் மாட்டிக் கொண்ட லோகேஷ் கனகராஜிக்கு காயம்

Leo
Leo

Leo : கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த லோகேஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் லியோ.. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன்..

திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.  கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. மக்கள் மத்தியில்  கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை.

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து – வுக்கு சிலை வைத்த ரசிகர்கள்..? மக்கள் மனதில் இருந்து மறையாத குணசேகரன்

முதல் நாள் வசூலில் லியோ படம் 148.5 கோடி வசூல் செய்து இந்தாண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதுவரை மட்டும் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் நாள் முதல் ஷோ சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் லியோ படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்திருந்தார்..

இந்நிலையில் கேரளாவில் லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கு என்பதை நேரில் பார்க்க இன்று காலை லோகேஷ் கனகராஜ் பாலக்காட்டிற்கு சென்றிருக்கிறார்.. அங்கு ரசிகர்களை பார்த்த புகைப்படம் எடுத்துக் கொண்டு பத்திரிகையாளரை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.

thalapathy 68 : மங்காத்தாவை தொடர்ந்து தளபதி 68 லும் தனது கேங்கை களமிறக்கும் வெங்கட் பிரபு.!

ஆனால் கூட்ட நெரிச்சலில் சிக்கிய லோகேஷ் கனகராஜிக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.. அதனால் காயத்தை சரி செய்த பிறகு உங்களை வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர் ட்விட்டர் பக்கத்தில் “கேரளாவின் அன்பிற்கு நன்றி. உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால் மற்ற இரண்டு இடங்களுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் என்னால் வர முடியவில்லை, விரைவில் திரும்ப கேரளாவிற்கு வருவேன் அதுவரை இதே அன்புடன் லியோ படத்தை ரசித்து கண்டு களியுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்..