மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் மறுபடியும் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் லோகேஷ் உடன் தற்பொழுது விஜய் கைகோர்த்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கமர்சியல் திரைப்படமாக அமைவது மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.
என்னதான் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வந்தாலும் இவர் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க போகும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புதான் ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது அந்த வகையில் இந்த அளவு எதிர்பார்ப்பு உருவாவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் உலக நாயகன் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தில் கொடுத்த வெற்றி தான்.
அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் தளபதி 67வது திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்பதன் காரணமாக அதில் ஆறு மிரட்டல் வில்லன்களை நடிக்க வைக்க உள்ளார் அந்த வகையில் பிரித்விராஜ் ஒரு வில்லனாக களம் இறங்க உள்ளார் அதேபோல கேஜிஎப் பட வில்லனம் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். மேலும் மீதமுள்ள நான்கு வில்லன்களை தேர்ந்தெடுக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தீவிரமாக உள்ளாராம்.
மேலும் பல்வேறு பிரம்மாண்ட நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளதன் காரணமாக ரசிகர் மத்தியில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர் பார்ப்பது அதிகரித்துள்ளது.