இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரைப்படம் தான் விக்ரம்.இந்த திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதன் காரணமாக வசூல் செய்தியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் வைத்து தளபதி 67 திரைப்படத்தினை இயக்க இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது இந்த திரைப்படத்தினைப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது விக்ரம் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, கமலஹாசன் ஆகியோர்களை தொடர்ந்து அனைவராலும் பேசப்பட்டவர் தான் ஏஜென்ட் டீனா. எதிர்பாராத விதமாக இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.
இத்திரைப்படத்திற்கு முன்பு இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை தந்தது பலராலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தில் ஏஜென்ட் டீனா அவருடைய கதாபாத்திரத்தை மிஞ்சுமலவிக்கு மிகவும் தரமான ஒரு கதாபாத்திரத்தை இந்த திரைப்படத்தில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளாராம். மேலும் அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையான திரிஷா தான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் தான் காதல் காட்சிகள் கிடையாதாம் இவ்வாறு திரிஷா தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.