தமிழ் திரைஉலகில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியவர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே சின்ன சின்ன குறும்படங்களை இயக்கியதன் பின்புதான் மாநகரம் படத்தை இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து தான் இவர் நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார்.அந்த திரைப்படம் திரையரங்குகளில் செம ஹிட் அடித்ததால் அடுத்ததாக இவர் இளைய தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13ம்ததி 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் தன்னுடைய அடுத்த படத்தை பற்றி பேசியுள்ளார்.அதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளாராம்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள விக்ரம் திரைப்படத்தை முடித்த பிறகுதான் இந்த திரைப்படத்தை பற்றி யோசிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தை ஓட்டிட்டு தளத்தில் இயக்க போவதாகவும் அந்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசி உள்ளார்.
மேலும் இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.