தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருபவர். லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை எடுத்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார் முதல் படமும் பெரியளவு வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக அந்த படம் வெற்றி பெற்றது.
அதன் பிறகு நடிகர் கார்த்தி உடன் கைகோர்த்து கைதி திரைப்படத்தை எடுத்தார் இந்த படத்தில் ஹீரோயின், பாடல் என எதுவுமே இல்லாமலேயே நல்ல வரவேற்பை பெற்று படம் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது அதனை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தை எடுத்தார்.
இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பியது இதன் பிறகு லோகேஷன் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. கடைசியாக இவர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து படம் பண்ணினார் அந்த படம் தான் விக்ரம். இந்த படம் வசூலில் 410 கோடி அள்ளி புதிய உச்சத்தை தோட்டது. தற்பொழுது தளபதி 67 திரைப்படத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தற்போது நடிக்கவும் முடிவெடுத்து இருக்கிறார் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் சொன்னதற்காக கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு சீன்னில் வந்து போயிருப்பார் லோகேஷ். தற்பொழுது வேறு ஒரு திரைப்படத்திலும் நடிக்க சம்மதம் கொடுத்துள்ளார்.
ஆம் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தில் தான் லோகேஷ் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.