சரியான நேரம் பார்த்து அனிருத்தை கழட்டிவிட்ட லோகேஷ் கனகராஜ் – அடுத்த படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்.!

lokesh
lokesh

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் இயக்கிய சில படங்களிலேயே மாபெரும் வெற்றி அடைந்து காணப்படுகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் கதை சூப்பராக இருந்த காரணத்தினால் போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகளவு வசூலை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இணைந்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவிலே வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி என்னும் ஆக்சன் படத்தை கொடுத்திருந்தார்.

அப்போது உடனடியாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு சாம் சி இசையமைத்திருந்தார் இதற்கு அடுத்து லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் விக்ரம் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் படங்களும் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது.

இதனால் தற்போது அனிருத்தும் லோகேஷும் மிக நெருங்கிய நண்பர்களாக காணப்பட்டு வருகின்ற நிலையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை கூடிய விரைவில் லோகேஷ் தொடங்குவார் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த சாம்சி யை இயக்குனர் லோகேஷ் புக் செய்வாரா அல்லது தனது நெருங்கிய நண்பர் அனிருத்தை ..

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்வாரா என்ற சந்தேகம் பலரது மத்தியில் எழுந்துள்ளது இதற்கு சாம் சி தரப்பிலிருந்து கைதி 2 படத்திற்கு நான் தான் இசையமைக்க உள்ளேன் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.