பல வருடங்களாக பார்த்து பார்த்து கதையை உருவாக்கி வரும் லோகேஷ் கனகராஜ் – தளபதி 67 எப்படி இருக்க போகுது தெரியுமா.?

vijay and lokesh
vijay and lokesh

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்சன் திரைப்படங்களை இயக்குவதில் ரொம்பவும் கை தேர்ந்த ஒரு நபராக இருக்கிறார். இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் இப்போ உலகநாயகன் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தையும் எடுத்து வெற்றி கண்டுள்ளார்.

தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களை மாறியதால் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் இவரும் இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் 2வது முறையாக கைகோர்த்து பணியாற்றிய இருக்கிறார். தளபதி 67 வது படத்தை இவர் தான் இயக்க உள்ளாராம்.

விக்ரம் திரைப்படம் எப்படி ஒரு ஆக்சன் திரைப்படமோ விஜயின் 67வது திரைப்படமும் ஒரு மாஸ் ஆக்சன் கலந்த படமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படம் எப்படிப்பட்ட படம் என்பது தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு முன்பே ஒரு கேங்ஸ்டர் படத்தின் கதையை உருவாகி வருவதாகவும் அது கால தாமதமாகும் என கூறியிருந்தார். அந்த கதை தான் தளபதி 67 திரைப்படமாக இருப்பதாக கூறப்படுகிறது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப் படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஏனென்றால் லோகேஷ் –  க்கு ஆக்சன் கதைகளை தான் ரொம்ப இயக்கவும் பிடிக்கும்.

எது எப்படியோ தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக தென்னிந்திய சினிமா முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஒப்பந்தமாகி உள்ளார். இது ரசிகர்களுக்கு தற்போது செம்ம சந்தோஷத்தை கொடுத்துள்ளது.