தமிழ் சினிமா உலகில் ஒரு பக்கம் சிறந்த கதைகளம் உள்ள படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற முன்னணி இயக்குனர்களாக திகழ்ந்து வருகின்றனர் ஆனால் அதற்கு மாறாக இந்த காலகட்டத்தில் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்பது போல் எடுத்தவுடனேயே..
டாப் நடிகர் நடிகைகளுக்கு கதையை கூறி அதிக வசூலை அள்ளும் படங்களை சில இளம் இயக்குனர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி விஜயுடன் மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து உள்ளவர்.
தற்போது உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் என்னும் திரைப்படத்தையும் எடுத்துள்ளார் இந்த படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது விக்ரம் படம் இதுவரை தமிழில் வந்த அனைத்து திரைபடங்களின் வசூலை முறியடித்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார் மேலும் படத்தில் விஜய் டிவி பிரபலம் தீனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தநிலையில் மாஸ்டர் படத்தின்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய சில வார்த்தைகளை தீனா ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார். தீனா கூறியது விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப ஜாலியாக பேசுவார் அவர் ஒருநாள் இவன் எப்படி சினிமா குள்ள வந்தா இயக்குனர் ஆக வேண்டும் என்றால் யாரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்றி இருக்க வேண்டும்.
இல்லையெனில் குறும்படம் ஏதாவது இயக்கி இருக்க வேண்டும் ஒரு நான் லீனியர் படத்தை எடுத்துவிட்டு அதன் பிறகு எப்படி படம் இயக்குரான் எனக்கு டயலாக் இன்னும் கொடுக்க மாட்டேங்கிறா, ஷூட்டிங் வந்து எழுதிக் கொடுக்கிறா என விஜய் கூறியதைப் தீனா தெரிவித்துள்ளார்.