Lokesh Kanagaraj : இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அட்லி, நெல்சன் திலிப்குமாரை தொடர்ந்து லோகேஷ் நாகராஜன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கூடிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் முதலில் உருவான “மாநகரம்” படம் சிறிய பட்ஜெட்டில் வெளிவந்தது.
படம் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியதால் வெற்றி அடைந்தது அதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்தார் இந்த படத்தில் ஹீரோயினுக்கு வேலையில்லை, பாடல் இல்லை.. படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் இருந்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதுவும் விஜய் படத்துடன் மோதி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உடனே விஜய் உடன் லோகேஷ் கூட்டணி அமைத்து மாஸ்டர் படம் அதிரடியாக எடுத்தனர். வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடிய பெரிய வசூலை அள்ளியது. இப்படி டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்தாலும் தனது ஆசை நாயகன் கமலஹாசன் உடன் இணைய வேண்டும் என்பது லோகேஷ்க்கு கனவாக இருந்தது.
பல மேடைகளில் சொல்லி வந்த லோகேஷ் ஒரு கட்டத்தில் கமலிடம் விக்ரம் கதை சொல்ல ரொம்ப பிடித்து போகவே கமல் தானாக முன்வந்து படத்தை நடித்தது மட்டுமல்லாமல் தயாரித்தார். படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளிக்கொண்டது. இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷன் மார்க்கெட் மிகப்பெரிய ஒரு உச்சத்தை தொட்டது. கடைசியாக விஜயை வைத்து லியோ படத்தை எடுத்தார். அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் இதுவரை மட்டுமே சுமார் 560 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அடுத்து ரஜினியை வைத்து படம் பண்ண இருப்பதாக கூறப்படுகிறது லோகேஷ் கனகராஜ் இதுவரை ஐந்து படங்களை தான் இயக்கியுள்ளார். ஆனால் அந்த ஐந்து படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ரஜினியின் தலைவர் 171 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளம் 30 கோடியில் இருந்து 40 கோடியை வரை இருக்கும் என ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.