திடீரென விஜய்யை சந்திக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ்.! எதற்காக தெரியுமா.? போடு தகிட தகிட…

lokesh-kanagaraj

Lokesh Kanagaraj to meet Vijay : மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீரென நடிகர் விஜயை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், என பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டடித்தது, கொரனோ ஊரடங்கு காரணமாக மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது, இந்த ஊரடங்கு மட்டும் இல்லையென்றால் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும்.

vijay-master
vijay-master

மாஸ்டர் திரைப்படத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக லோகேஷ் கனகராஜ் விஜயை சந்திக்க இருக்கிறார், தற்பொழுது தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பைனல் எடிட் ரெடி ஆகி விட்டதால் விஜயிடம் காட்டுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்திக்க இருக்கலாம் என சொல்லுகிறார்கள் சினிமா வட்டாரத்தில், அதேபோல் கொரனோ நிலைமை சீரான பிறகுதான் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.