ஈவு இரக்கம் இல்லாம அடிக்கிறீர்களே கொஞ்சம் கேப் விட்டு அடிங்களேன்..! விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு அடித்த சன் பிக்சர்ஸ்

vijay rajini
vijay rajini

Thalaivar 171: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்க மாட்டார் என்றும் எனவே தலைவர் 171 படம் ட்ராப் என சோசியல் மீடியாவில் வதந்திகள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இதற்கு அதிரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது. அப்படி தற்பொழுது வரையிலும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. எனவே ஜெயிலர் வெற்றினை கொண்டாடும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மூவருக்கும் விலை உயர்ந்த கார்களையும், செக்கையும் பரிசாக வழங்கி கொண்டாடினார்.

இந்த படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் எந்த இயக்குனரின் திரைப்படத்தில் இணையப் போகிறார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வமான அப்டேட்டை தற்பொழுது சன் பிரக்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எனவே இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் எந்த ஒரு நடிகரின் படத்தையும் இயக்க மாட்டார் சினிமாவை விட்டு விளங்குகிறார் என்ற வதந்திகள் வைரலானது. எனவே இது குறித்து தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்றும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அன்பறிவும் மாஸ்டர் தான் ஸ்டண்ட் என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு இந்த அறிவிப்பு சோசியல் மீடியாவில் வைரலாக ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் ரஜினியை கலாய்த்து வந்த நிலையில் தற்போது இதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சரியான பதிலடி கொடுக்க ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வச்சி செய்து வருகின்றனர்.