நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் முடிந்து விடுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தினை பற்றிய தகவல் கசிந்துள்ளது அதாவது நடிகர் விஜயின் 67வது திரைப்படத்தின் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாக உள்ள நிலையில் மேலும் சஞ்சய் தத், நவீன் பாலி, கௌதமேனன், விஷால், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கைதி திரைப்படத்தில் நடித்த பிரபலம் ஒருவரை லோகேஷ் கனகராஜ் அவர்கள் அழைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்ற பல முன்னணி நடிகர்களின் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி திரைப்படம் வெளியாகி இதுவும் பெரிய வெற்றினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் கைதி, தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், விக்ரம் நடித்த மகான் உள்ளிட்ட பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த பிரவீன் தற்போது தளபதி 67 படத்திலும் பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விஜய்க்கு டெஸ்ட் விரைவில் எடுக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் ஓய்வெடுத்து வருகிறார் மேலும் சென்னை திரும்பியதும் இந்த லுக் டெஸ்ட் பணியில் ஈடுபட இருக்கிறார் மேலும் இந்த படத்தில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு நடிகர் விஜய் என்று இருப்பதாகவும் ஆக்சன் அதிரடி கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் தளபதி 67 படத்தினை பற்றி வருகின்ற டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.