குட்டி பவானிக்கு புதிய காரை தூக்கி கொடுத்த லோகேஷ் கனகராஜ்.! எதற்காக தெரியுமா.?

mahenthiran

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் எப்படி பிரபலமடைந்தாரோ அதே அளவிற்கு விஜய் சேதுபதியும் புதிதாக வில்லன் கேரக்டரில் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பொங்கலை முன்னிட்டு இத்திரைப்படம்  திரையரங்குகளில் ரிலீஸானது இதனை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கழித்து  OTT-யில் வெளியானது.

அந்த வகையில் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி அனைவருக்கும் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இவ்வாறு இந்தத் திரைப்படம்  பிரபலமடைந்தாளும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகைகளுக்கு சொல்லுமளவிற்கு பெரிய அளவிலான கேரக்டர்கள் இல்லை. அந்தவகையில் ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருந்தார். எனவே ரசிகர்களும் ஏன் இவர் இந்த சண்டை காட்சியில் மட்டும் ஆண்ட்ரியா  வந்தார் என்றும் கூறி வந்தார்கள்.அதோடு ஆண்ட்ரியாவும் இனிமேல் இது மாதிரி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்திருந்த பவானி கேரக்டரில் சின்னவயது பவானியாக  நடித்து இருந்தவர் நடிகர் மகேந்திரன். இவரும் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால்  நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

logesh kanagaraj
logesh kanagaraj

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மகேந்திரனுக்கு கார் ஒன்றை அன்பு பரிசாக வழங்கியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் சின்ன கேரக்டரில் நடித்த இவருக்கு கார் பரிசா?என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.