தமிழ் சினிமாவில் சமீபத்தில் மக்களால் பெருமளவு கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் அவர்கள் நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் திரையில் வெளியாகி 380 கோடி வசூலாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் நட்சத்திரங்களும் ரசிகர்களும் லோகேஷ் கனகராஜ் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக இயக்குனர்கள் தயாரிப்பாளராக அவதாரம் எடுப்பது வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் தயாரிப்பாளராக மாறி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பல்வேறு நடிகர்களும் கூட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் அந்த வகையில் கமலஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், அதேபோல சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம், நயன்தாரா ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் மூலமாக பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் தயாரிப்பில் இறங்குவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியவர்களுக்கு வாய்ப்பளிக்க தான் அந்த வகையில் இவர் தன்னுடைய உதவி இயக்குனர்கள் பலரையும் கமலிடம் சிபாரிசு செய்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக நடிகர் கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்தின் மூலமாக அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உதவி இயக்குனருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தால் போதாது என்ற காரணத்தினால் புதியதாக வரும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் லோகேஷ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளாராம்.
இவ்வாறு லோகேஷ் ஸ்டைலை பார்த்து பல்வேறு பிரபலங்களும் காசு சம்பாதிப்பதில் மட்டும் தயாரிப்பாளர்கள் நோக்கமாக இருக்கும் நிலையில் லோகேஷ் இப்படி ஒரு செயலை செய்ய விரும்புகிறார் என அவரை பாராட்டி வருகிறார்கள்.