மாஸ்டர் படத்தில் நடிக்க இருந்த பிரபல கிரிக்கெட் – உண்மையை உடைக்கும் லோகேஷ் கனகராஜ்..!

vijay-
vijay-

சென்ற ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் இயக்கி இருந்தார் படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து முக்கிய வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மற்றும் ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் போன்ற பலரும் மாஸ்டர் படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு அவரது இசையும் பெரிய பிளஸ் ஆக பார்க்கப்பட்டது.

இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து இடையே நடந்த டி20 உலக கோப்பை தொடரில் கமெண்டரி நிகழ்வில் ஆர்.ஜே பாலாஜியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் கலந்து கொண்டார். அப்போது இருவரும் பல சுவாரசிய தகவல்களை பேசி வந்த நிலையில் இந்திய அணி வீரரும், கிரிக்கெட் தொகுப்பாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு ஆர் ஜே பாலாஜி அவரைப் போல் பேசி சிரித்து பின்பு அவர் குறித்து யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். ஆம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கிருஷ்ணமாச்சேரி ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் என கூறினார்.

அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற கல்லூரி முதல்வர் கேரக்டரில் முதலில் எங்கள் தேர்வாக இருந்தது கிருஷ்ணமாச்சேரி ஸ்ரீகாந்த் தான்.. பின்பு ஒரு சில காரணங்களால் அது நடைபெறாமல் போனது என கூறியுள்ளார்.