தற்பொழுது தமிழ் சினிமாவில் தோல்வியை துளி கூட சந்திக்காத ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தொடர்ந்து வெற்றி திரைபடங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவருடைய அடுத்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுறிகிறார்கள்.
பொதுவாக தமிழ் சினிமாவின் நுணுக்கங்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிகத் தெளிவாக புரிந்து கொண்ட ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் அந்த வகையில் தன் கற்றுக் கொண்ட அனைத்து வித்தைகளையும் திரைப்படமாக எடுத்து அவற்றை வெளியிட்டு வெற்றி கண்டு வருகிறார்.
இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர்களும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய இயக்கத்தில் கமலஹாசன் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அடுத்ததாக தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்க்கு கொடுத்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் லோகேஷ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது அவரிடம் நீங்கள் எந்த நடிகரின் திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி வைக்கப்பட்டது அதற்கு பதில் அளித்த லோகேஷ் அவர்கள் நான் அனைத்து நடிகர்களின் திரைப்படத்தையும் இயக்க ஆசைப்படுகிறேன் அது மட்டும் இல்லாமல் அதற்கு காலமும் நேரமும் தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் குறிப்பாக அஜித் மற்றும் ரஜினிகாந்தின் திரைப்படத்தை இயக்க எனக்கு மிகவும் ஆசை என்று கூறியிருந்தார் அந்த வகையில் ரஜினி க்கு இணையான கமலின் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கிவிட்டார் அதேபோல அஜித்துக்கு இணையான விஜய் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கிவிட்டார்.
அந்த வகையில் தற்பொழுது இரண்டு பெரிய நடிகர்களுக்கும் வலை விறித்துள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது மேலும் இந்த கூட்டணியில் திரைப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக மாபெரும் வெற்றி தான் அது மட்டும் இல்லாமல் லோகேஷ்க்கு காலமும் நேரமும் சரியாக இருந்தால் கண்டிப்பாக இந்த கூட்டணி ஒன்று சேரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.