ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ்.! படத்தைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா.?

vijay
vijay

தமிழ் திரையுலகில் நேற்று மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது மேலும் வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிவந்த அனைத்து நபர்களும் நேற்று சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பர்த்திருக்கிறார்கள்.

அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,அனிருத்,சாந்தனு,தீனா போன்ற பலரும் படம் பார்க்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தகவலை கூறியுள்ளார்.அந்த தகவல் என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தை அனைவருடனும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது எனவும் முடிந்த அளவு சமூக இடைவெளி விட்டு படம் பாருங்கள் எனவும் கூறியுள்ளதாக தகவல் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

vijay
vijay