மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை எடுத்து வெற்றி கண்டார். உடனே தளபதி விஜய்க்கு கதை சொல்லி “மாஸ்டர்” படத்தை எடுத்தார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது இந்த படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கோடி சம்பளம் வாங்கினார்.
அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனிடம் “விக்ரம்” படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கினார் அந்த படம் உடனடியாக உருவாக்கப்பட்டது. வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது விக்ரம் படத்திற்கு லோகேஷ் 10 கோடி சம்பளம் கேட்டார் ஆனால் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கமலஹாசன்..
அவருக்கு 12 கோடி சம்பளம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். இப்போ மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் லோகேஷ் இயக்கி வரும் திரைப்படம் “லியோ”. இந்த படம் முழுக்க முழுக்க சர்வதேச போதை பொருளை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், சந்திப் கிஷன், திரிஷா, பிரியா ஆனது மற்றும் பலர் நடிக்கின்றனர் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்திற்காக லோகேஷ் 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் வெற்றிபெறும் பட்சத்தில் லோகேஷ் 30 கோடியில் இருந்து 40 கோடியை வரை சம்பளம் வாங்க வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் முதன்மை பட்டியலில் இருப்பவர் ஷங்கர் இவர் இந்தியன் 2 படத்திற்காக 35 கோடி முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. போகின்ற போய் பார்த்தால் ஷங்கரையை பீட் பண்ணி விடுவார் லோகேஷ்.