விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றியை கொண்டாட மறுத்த லோகேஷ் கனகராஜ்..! அவர் சொன்ன பதிலால் கடுப்பான ரசிகர்கள்.

kamal
kamal

திரை உலகில் பல வெற்றிகளை கண்டவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று ஓடியது. அதன் காரணமாக வசூலில் அடித்து நொறுக்கியது.

விக்ரம் திரைப்படம் இதுவரை 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளது. திரையரங்கையும் தாண்டி இந்த படம் OTT தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற படத்தின் கதைகள் சிறப்பாக இருந்தாலும் கமலுக்கு நிகராக இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்.

மற்றும் நரேன், காயத்ரி, மைனா நந்தினி, சிவானி, மகேஸ்வரி, சூர்யா போன்றவர்களும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது இந்த படத்திற்கு பிளஸ் ஆக இருந்தது. இந்த படம் இதுவரை 100 நாட்களை தொட்டும் சில திரையரங்குகளில் ஓடி கொண்டு தான் இருக்கிறது.  விக்ரம் படம் குறித்து கமலே பல தடவை  ஆச்சரியப்பட்டு பேசி உள்ளார்.

நான் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய கேரியரில் இத்தகைய வெற்றி இதுவரை நான் பார்த்தது இல்லை என அவரே கூறுகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை அந்தந்த ஊர்களில் உள்ள சில திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது அப்படி கோயம்புத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் நூறாவது நாளை கொண்டாடி உள்ளனர்.

ஆனால் விக்ரம் படத்தின் 100-வது விழாவை லோகேஷ் கனகராஜ் கொண்டாடாமல் ஒரு காபி ஷாப் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக போயிருந்தார். அப்பொழுது அவரிடம் விக்ரம் படத்தின் 100-வது நாள் விழாவுக்கு போகவில்லையா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் எனக்கு வேறு சில முக்கியமான வேலைகள் இருக்கு அதனால நான் போகவில்லை என அசால்டாக கூறியுள்ளார். இச்செய்தி  கமல் ரசிகர்கள் மத்தியில் சற்று கோபத்தை வர வைத்துள்ளது.