Lokesh kanagaraj : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10 தேதி உலகம் முழுவதும் வெளியாகிய திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிருனாள், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
ஆக்சன் படமாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக ரஜினி லால் சலாம் என்ற திரைப்படத்தை முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அது மட்டும் இல்லாமல் அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்கும் தலைவர் 170 வது திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஓடி ஆடி நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயிலர் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது லியோ திரைப்படத்தில் தான் இதனைத் தொடர்ந்து ரஜினி லோகேஷ் கூட்டணி இணைய இருப்பதாக ஹோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியாகும் எனவும் கூறுகிறார்கள்.
ஆனால் தற்பொழுது ஒரு புதிய சிக்கல் இதில் ஏற்பட்டுள்ளது தலைவர் 171 வது திரைப்படத்தின் கதை சொல்வதற்காக ரஜினியை சந்தித்துள்ளார் லோகேஷ் கனகராஜ் அப்பொழுது 171 வது கதை சொல்லி முடித்ததும் விஜய்யின் லியோ திரைப்படம் எந்த லெவலில் இருக்கிறது என ரஜினி கேட்டுள்ளார் உடனே ஒரே ஒரு மாசீனை மட்டும் லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் கூறியுள்ளார் அந்த சீனை எடுத்து அப்படியே ஜெயிலர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது வேற எந்த சீனும் கிடையாது ஜெயிலர் இடைவெளி காட்சியளிக்கு முன்னாடி வரும் ஸ்னைப்பர் கன் ஷாட் தான் இந்த காட்சியை பார்த்த லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் 171 வது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணையலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறார் ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படி செய்வார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அதேபோல் லோகேஷ் கனகராஜ் எழுதிய அந்த மாஸ் சீன் லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.