ஒரே இடத்தில் மூன்று பிரபல நடிகர்களையும் கூட வைத்த லோகேஷ் கனகராஜ்..! இனிமேல் தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது..!

vikram-011
vikram-011

தமிழ் சினிமாவில் மாநகரம் கைதி போன்ற படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து மாஸ்டர் எனும் திரைப்படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்கினார்.

இதுவரை வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது இந்நிலையில் தளபதி விஜய்க்கு பிறகாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் நமது இயக்குனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கமலின் பிறந்த நாளன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தூண்டியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் வருகின்ற 17 ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழுவினர்கள்  கூறியுள்ளார்கள்

மேலும் இந்த படப்பிடிப்பின்போது கமல் விஜய் சேதுபதி பகத் பாஸில் என மூவரும் ஒன்றிணையும் காட்சி எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது ஆகையால் இந்த மூவரும் ஒரே இடத்தில்  கூடுவதால் ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் இருப்பது மட்டுமல்லாமல்  ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

ஆனால் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.