Lokesh kanagaraj : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான இயக்குனராக பார்க்கப்படுபவர் லோகேஷ் கனகராஜ் இவர் கடைசியாக எடுத்த “விக்ரம்” திரைப்படம் 400 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ படத்தை எடுத்துள்ளார்.
படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. லோகேஷின் மற்ற படங்கள் போலவே லியோ படத்தில் அதிகம் சண்டை காட்சிகள் தான் இருக்கும் என தெரியவும் வந்துள்ளது.
இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகரை மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது வருகின்ற அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளது இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ ஷூட்டிங் முடித்த கையோடு புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விக்ரம் படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கமல் சொகுசு கார் ஒன்றை லோகேஷுக்கு வழங்கினார் அதனை தொடர்ந்து தற்போது லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கி உள்ளார் அதன் மதிப்பு மட்டுமே சுமார் 1.70 கோடி என சொல்லப்படுகிறது இந்த காரின் சிறப்பு அம்சம் எனவென்றால்..
ஜீரோவிலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.4 வினாடியில் எட்டி விடுமாம், ஸ்மார்ட் போன் வசதியுடன் இந்த காரை அன்லாக் செய்யவும் ஸ்டார்ட் பண்ணவும் முடியும். இந்த கார் ஒரு லிட்டருக்கு சுமார் 12.61 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கக்கூடியது என கூறப்படுகிறது.