தமிழ் சினிமாவில் நான்கு படங்களை மட்டும் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக விஜய வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் விபர்ச்ச்சனா ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க இருந்தார் அனால் ஒருசில பிரச்சனையின் காரணமாக அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது அதன் பிறகு விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படம் முடிந்ததும் கார்த்தியை வைத்து கைதி 2 இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் நடத்திய பிரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுடன் கலந்து உரையாடிய லோகேஷ் கனகராஜ் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது அவர் இயக்கிய முதல் படமான மாநகரத்தில் நாயகன் ஸ்ரீயை சென்னை மீதான வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியது ஏன் என்றும் நிஜத்தில் உங்களுக்கு சென்னை பிடிக்குமா பிடிக்காதா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்க்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் மாநகரத்தில் ஸ்ரீயின் கேரக்டர் சென்னை மீது வெறுப்பு கொண்ட இளைஞனாக காட்டியிருந்தாலும் இறுதியில் அவர் இந்த ஊரைப் பற்றி புரிந்து கொள்ளும் காட்சி இருக்கும் என்றும் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் மனிதன் பண்ணும் தப்பிற்கு ஊரை குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை ஊர் என்பது பல மக்கள் வந்து போகும் இடம். பெயர் தெரியாத ஒருவருக்கு உதவி செய்றது சென்னை மாதிரி உள்ள ஊர்கள்தான் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். இதனை சென்னை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.