சூப்பர்டா கவின்.. “டாடா” படம் குறித்து பதிவிட்ட லோகேஷ் கனகராஜ்.!

logesh-kavin-
logesh-kavin-

அண்மைக்காலமாக சின்னத்திரை நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் என பலரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர். இவர்களில் ஒருவர் தான் நடிகர் கவின். முதலில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் அப்போது இவருக்கு நல்ல பாப்புலாரிட்டி இருந்தது.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி சிறப்பாக விளையாடி வந்தார் இப்படி சின்ன திரையில் கொடிகட்டி பறந்து வந்த கவின் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பின் ஹீரோவாக நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

இந்த படம் அவருக்கு சுமாரான வெற்றியை பெற்றுக் கொடுத்தது அதைத் தொடர்ந்து அமிர்தா ஐயர் உடன் இணைந்து லிப்ட் என்ற படத்தில் நடித்தார். தற்போது கவின் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற திரைப்படம் உருவாகி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. டாடா படத்தை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் திரையரங்கை நாடி கண்டுகளித்து பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த படத்தின் மூலம் கவினுக்கு அடுத்தடுத்து அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டாடா படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியது “டாடா திரைப்படம் குறித்து நிறைய பாசிட்டிவான விமர்சனங்களை கேள்விப்பட்டு வருகிறேன். வாழ்த்துக்கள் டா கவின், டாடா படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.