விக்ரம் படத்தில் கமலை வச்சி செய்த லோகேஷ் கனகராஜ்.? ஒரு சீன் எடுக்க மட்டுமே இத்தனை டேக்கா..

kamal-and-lokesh
kamal-and-lokesh

தமிழ் சினிமா உலகில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தவர் உலக நாயகன் கமலஹாசன் இவரது நடிப்பை பார்க்கவே ஒரு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஒரு மிகப்பெரிய படமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தில் கமலை மிரட்ட வைக்கும் அளவிற்கு பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ட்ரெய்லரை தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் பல்வேறு பேட்டிகளில் விக்ரம் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அவர் சொல்லி உள்ளது நான் பார்த்து வியந்த நடிகர்களில் ஒருவரான கமல் அவரை வைத்தே நான் பட இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் மற்ற ஹீரோக்கள் என்றால் ஒன்ஸ்மோர் கேட்டுக்கொள்வேன் ஆனால் கமலிடம் எப்படி கேட்பது என்று எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது.

இருந்தாலும் கமலிடம் போய் ஒருமுறை நான் கேட்டேன். அவர் காட்சிகள் சரியாக வரவேண்டும் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார் அதன்பிறகு தைரியமாக தனது வேலையை ஆரம்பித்து விட்டேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதன்படி ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக கமலிடம் இருந்து ஒன்ஸ்மோர் வாங்கியுள்ளாராம் .

நான் எண்ணிக் கொண்டே இருந்தேன் என தெரிவித்தார்.  அந்த ஒவ்வொரு செய்கையும் நான் எண்ணி கொண்டு இருந்தேன் என கூறினார் இதை அறிந்த கோலிவுட் வாசிகள் நடிப்புக்கு பெயர்போன கமலஹாசனுக்கு இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை என்ன..