தான் இயக்கிய திரைப்படத்தில் குறையை ஓப்பனாக ஒப்புக்கொண்ட லோகேஷ் கனகராஜ்.! அதுவும் விக்ரம் படத்திலேயா அதிர்ச்சியாகும் ரசிகர்கள்…

vikram kamal
vikram kamal

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது அது மட்டும் இல்லாமல் தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற அந்தஸ்தையும் அடைந்தார்.

தான் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்ததால் மூன்றாவதாக விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது மாஸ்டர் திரைப்படமும் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது ஆனால் மாஸ்டர் திரைப்படம் 50% மட்டுமே லோகேஷ் திரைப்படமாகவும் 50% விஜய் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமலஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக உருவானதால் மிகப்பெரிய வெற்றியடைந்தது விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி தான் வில்லன். இப்படி  விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு காரணம் சூர்யா நடித்ததும் ஒன்று என கூறலாம்.

கடைசியாக சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலற விட்டு விட்டார் எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் விஜய்  அவர்களுடன் மீண்டும் லியோ என்ற திரைப்படத்தில் மூலம் இணைத்துள்ளார் இந்த திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் வில்லன் நடிகர்களாக ஆறுக்கும் மேற்பட்ட நடிகர்கள் இணைந்துள்ளார்கள்.

அதனால் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது இதனை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் விக்ரம் திரைப்படத்தில் சொதப்பியது என்றால் எதை கூறுவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தில் சொதப்பல் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் தான் எனக் கூறிக்கொண்டு எனக்குப் பிடிக்காதது என்று சொல்ல முடியாது ஆனால் இன்னும் டைம் கொடுத்து இருந்தால் இதை நன்றாக செய்திருக்கலாம் என vfx சரியாக இல்லை எனவும் கூறியிருந்தார்.

இன்னும் சிறிது காலம் அவகாசம் கொடுத்திருந்தால் இன்னும் vfx அற்புதமாக வந்திருக்கும்  என லோகேஷ் கனகராஜ் மேடையிலேயே வெளிப்படையாக கூறியுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.