பாயிண்டை பிடித்த லோகேஷ் கனகராஜ்.. திணறிய திரையரங்க உரிமையாளர் சங்கம்.? என்ன சோணமுத்தா போச்சா..

rohini theatre leo
rohini theatre leo

Leo movie : தளபதி விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடந்து தற்போழுது லியோ  திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதனால் படத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் சமீபத்தில் வெளியாகிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

லியோ திரைப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் த்ரிஷா விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பல இணையதளங்களுக்கு பேட்டியை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டது அந்த வகையில் லியோ ப்ரோமோஷன் பெரிதாக நடக்கவில்லையே ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ப்ரோமோஷன் நடத்தலாம் என திட்டமிட்டது உண்மைதான் எங்களுக்கு 12,000 டிக்கெட் தேவைப்பட்டது அதுமட்டுமில்லாமல் ஃப்ரீ பாஸ் என கூறினால் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேருக்கு மேல் ஒரே இடத்திற்கு வருவார்கள் ஆனால் அந்த இடத்தில் 6500 பேர் மட்டுமே உட்கார முடியும் அதனால்தான் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என லியோ ஆடியோ லான்ச்சை கேன்சல் செய்தோம்.

அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஒரு ஈவண்டில் அசம்பாவிதம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும் இதனால் லியோ திரைப்படத்திற்கு ஒரு பிளாக் மார்க் வரக்கூடாது என நினைத்தோம் என கூறினார். மேலும் அவரிடம் ட்ரெய்லர் வெளியிட்ட பொழுது ரோகிணி திரையரங்கம் அடித்து நொறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நான் லியோ ஆடியோ லாஞ்ச்க்கு சொன்ன காரணம் தான் இதுக்கும் சொல்லமுடியும்,  முன்னாடி சொன்னது தான் இப்பவும் சொல்றேன் என லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்தார் அப்பொழுது சென்சார் செய்யப்படாத ட்ரைலரை நாங்கள் யூடிபில் வெளியிட்டோம் அந்த லிங்கை அவர்கள் எடுத்து நேரடியாக ஒளிபரப்பினார்கள் அதேபோல் ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே ரசிகர்களை விட்டிருந்தால் குறைவான நபர்கள் மட்டுமே இருந்திருப்பார்கள் ஆனால் ஃப்ரீ என கூறியதும் உடனே பல்லாயிரம் கணக்கான ரசிகர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள் இப்படி குறைவான ஆள் நிக்கும் இடத்தில் பல்லாயிரம் பேர் உள்ளே புகுந்தால் சம்பவம் நடக்கத்தான் செய்யும் இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் என்னிடம் பேசினார்கள் என லோகேஷ் கனகராஜ் கூறினார்.