லோகேஷ் கனகராஜின் அடுத்த பட நடிகர் யார் தெரியுமா.! இவருக்கு முன்னாடி விஜய் எல்லாம் சும்மா.

தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை இயக்குனர்கள் சிறந்த கதை அம்சத்தை வைத்து அதற்கு ஏற்றார் போல நடிகர்களை செலக்ட் செய்து நடிக்க வைப்பதால் திரைப்படம் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற குறைந்த திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதைக்கேற்ற பல நடிகர்களை நடிக்க வைத்து வெற்றி படமாக மாற்றினார்.

மேலும் பெரும் அளவில் வசூல் வேட்டையும் நடத்தின. இதனால் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலம் அடையவும் தொடங்கியுள்ளார்.

தற்போது தமிழையும் தாண்டி தெலுங்கு சினிமா பக்கம் நுழைந்துள்ளார் அதற்குக் காரணம்  தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ்க்கு வலை விரித்துள்ளனர்.

அந்த வகையில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி நிறுவனம் லோகேஷ் கனகராஜ் பெரிய தொகையை அள்ளிக்கொடுத்துள்ளது.

அந்த நிறுவனத்திற்காக ஒரு படம் கொடுக்க ரெடியாக உள்ளார். அதற்காக ஹீரோவை செலக்ட் செய்வதுது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் பிரபாஸ் கமிட் ஆகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வேறு ஒரு படத்தில் நடிப்பதால் மகேஷ்பாபுவுக்கு வலைவிரித்தனர். அவரும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மகேஷ் பாபுவா அந்த தயாரிப்பு நிறுவனத்தை விட்டு விட்டு வேறு ஒரு  தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறாராம் ஆனால் இந்த திரைப்படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் நான் ஆசையோடு இருக்கிறாராம் இதனால் இரண்டு பக்கமும் செம்ம பிரஷராம்.

இருப்பினும் மிகப் பெரிய நிறுவனம் எப்போதும் பெரிய நடிகர்களை பகைத்து கொள்ளாது. அதுபோலவேதான் இந்த நிறுவனம் தற்பொழுது விட்டுக் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  எது எப்படியோ மகேஷ்பாபும் லோகேஷ் கனரஜும் இணைந்தால் அவர் நிச்சயம் இந்திய அளவில் பிரபலம் அடைய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.