இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகிய கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இதனால் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, படத்தைக் காண சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தார் அந்த திரைப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு எப்போது தொடங்குவார்கள் என்று தெரியாமல் இருக்கிறது.
மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் விக்ரம் என வைத்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரட்டலாக இருக்கிறது எனக் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் டைட்டிலுக்கு இப்படி ஒரு வீடியோவா என ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.