lokesh kanagaraj next movie : 2017 ஆம் ஆண்டு ‘மாநகரம்’ என்ற வித்யாசமான திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்காக கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ், இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார் இது அவரின் இரண்டாவது திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் நடிகையை கிடையாது பாடலும் கிடையாது,ஆனாலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது, இந்த திரைப்படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மிகவும் எதார்த்தமாக விறுவிறுப்புடன் இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படம் இந்த மாதத்திலேயே ரிலீசாக வேண்டியது ஆனால் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, மாஸ்டர் படம் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் இரண்டு வாரங்களாக தேங்கிக் கிடக்கின்றன, மாஸ்டர் திரைப்படத்திற்கு விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இறங்கி விட்டார், இந்த திரைப்படத்தை உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, ஒருவேளை லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி விட்டால் ரஜினி மற்றும் கமல் இருவருடன் இணைந்து ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கிடைக்கும்.