50 கோடி சம்பளம் தருகிறேன் இவர் திரைப்படத்தை இயக்கு.! லோகேஷ் கனகராஜ் க்கு வந்த செம ஆஃபர்…

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன் முதலில் மாநகரம் என்ற திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு இயக்கி வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து கைதி மாஸ்டர் விக்ரம் என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார். மேலும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

அதிலும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் அவர்களை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன் விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் சாயலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பல நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக பல தகவல்கள் வெளியானது அப்படி இருக்கும் நிலையில் ஹிந்தியில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் காணும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

சல்மான் கான் திரைப்படத்தை இயக்குவதற்காக ரூபாய் 50 கோடி சம்பளம் கொடுப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைவார். இதற்கு லோகேஷ் கனகராஜ் சம்மதிப்பாரா இல்லையா என்பது இன்னும் கூடிய விரைவில் தெரியவரும்.