சும்மா ஒரு 30 நாள் டைம் கொடுங்க அந்த படத்தையும் முடிச்சிடலாம்.! லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் பலே திட்டம்

lokesh kanagaraj
lokesh kanagaraj

கைதி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்தார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு பாக்யராஜ் என முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

இயல்புநிலை திரும்பினால் மட்டுமே மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள், மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க  இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் ரஜினிகாந்த் அண்ணாத்தை படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருப்பதால் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பட வேலையை முடித்துவிட்டு ஃப்ரீயாக ஆகிவிட்டார், அதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்துள்ளாராம். ஏனென்றால் ரஜினி அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி முடித்து விடலாம் என லோகேஷ் கனகராஜ் திட்டம் போட்டுள்ளார்.

அதனால் இந்த ஊர் அடங்கில் கைதி இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்து இருப்பதாக கூறப்படுகிறது, தற்பொழுது கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான கெட்டப்பில் இருக்கிறார் அதனால் கார்த்தியை வைத்து குறைவான நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்கள் இந்த இரண்டாம் பாகத்தையும் எஸ் ஆர் பிரபுவே தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.