இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக யார் படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார், அந்தவகையில் கமலஹாசன் 232 வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது.
இந்த 232 ஆவது திரைப்படத்திற்கு தற்காலிகமாக எவனென்று நினைத்தாய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இதுக்காக ஒரு மிரட்டல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள், இதன் அறிவிப்பு புதன்கிழமை அன்று மிரட்டலாக வெளியாகும்.
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தின் கதை கிராமத்து சாயலில் ஒரு கேங்க்ஸ்டர் கதையாக இருக்கும் என்பதால் படம் முழுக்க தென்தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள் படக்குழு.
கமலஹாசனின் 232 ஆவது திரைப்படத்தின் கதை உண்மையில் தலைவர் 169 திரைப்படத்திற்கு எழுதப்பட்ட கதையாகும் அதனை கொஞ்சம் மாற்றி அமைத்து லோகேஷ் கனகராஜ் கமலஹாசனை வைத்து இயக்க இருக்கிறார், ஆனால் உண்மையில் இந்த திரைப்படத்தின் கதையை ரஜினிக்காக எழுதப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் படத்தை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, தலைவர் 169 திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஒரு மிரட்டலான கதாபாத்திரம் இருந்தது எனக் கூறப்படுகிறது, ஆனால் தற்பொழுது கமலஹாசனின் 232 திரைப்படத்திற்கு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி அணுக இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.
ஏற்கனவே விஜய் சேதுபதி கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் தனது கனவை பலமுறை மேடையிலேயே கூறியுள்ளார், விஜய்சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார், அதனால் கமலஹாசன் 232 திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது, படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்குள் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் படக்குழு.