ரஜினியின் இந்த திரைப்படம் தான் லோகேஷ் க்கு பிடிக்குமா.! ஒருவேளை தலைவர் 171 மெஹா ஹிட் திரைப்படத்தின் இரண்டாவது பாகமா.?

thalaivar 171 movie is thalapathy 2nd part
thalaivar 171 movie is thalapathy 2nd part

Lokesh Kanagaraj loves Rajinikanth Thalapathi film : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர். இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம் கைதி மாஸ்டர் விக்கிரமாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் தற்போது தளபதி விஜய் வைத்து லியோ  திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

மேலும்ல லியோ திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் அவர்கள் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அது குறித்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் கூறியதாவது கொரோனா காலகட்டத்தில் கமல் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தோம் ஆனால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறியிருந்தார்.

லியோ ட்ரைலருக்கும், படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமையா.? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே

தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ் அடுத்தது தலைவர் 121 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறோம் அதற்கான கதைகளை ரஜினியிடம் கூறியிருந்தேன் வீடியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் போன் செய்தார் அப்பொழுது அனைத்து அசிஸ்டன்ட் டைரக்டர் இருக்கும்பொழுது லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசினோம். அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தூள் கிளப்பிடலாம் கண்ணா என அனைவரிடமும் கூறினார்.

thalapathy movie
thalapathy movie

மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ரஜினி நடித்த திரைப்படத்தில் எந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என கேள்வி எழுப்பினார் தொகுப்பாளனி. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த திரைப்படத்திலேயே தளபதி திரைப்படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறி இருந்தார்.

ஆரம்பமே ஆட்டகாசமா இருக்கே.! தளபதி-67 leo படைத்த மாபெரும் சாதனை…

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி திரைப்படம் தனக்கு பிடித்த திரைப்படம் என கூறியுள்ளார் ஒருவேளை தலைவர் 171 வது திரைப்படம் தளபதி திரைப்படத்தில் இரண்டாவது பாகமாய் இருக்குமோ என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இது லோகேஷ் யுனிவர்ஸ் திரைப்படமாக இல்லாமல் ஒரு புதுவிதமான எக்ஸ்பிரிமெண்ட் திரைப்படமாக இருக்கும் என அறிவித்துள்ளார்.