யோவ் லோகேஷ்.. நீ பயங்கரமான ஆளுயா.. சத்தமே இல்லாம சம்பவம் பண்ற பாத்தியா.! ரகசியத்தை உடைத்த பிரபலம்.

lokesh kanagaraj learn boxing
lokesh kanagaraj learn boxing

Lokesh kanagaraj : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய் அவர்களை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் லியோ ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது அது மட்டும் இல்லாமல் அடுத்ததாக ரஜினியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இதன் நிலையில் லோகேஷ் கனகராஜ் பாக்சிங் கற்றுக்கொண்டு வருவதாக மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது லோகேஷ் பயங்கரமான ஷாக்கிங் ஆன பர்சன் நான் அவரிடம் நிறைய விஷயங்களை பேசி உள்ளேன்.

அவரைப் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருந்தது காரணம் அவர் எல்லாவற்றிலும் தன்னுடைய கவனத்தை சரியாக வைத்திருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அவர் பயங்கர பிட்டாக ஹீரோ போல் இருக்கிறார். அது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதற்கு நான் பாக்சிங் கற்றுக் கொண்டிருக்கிறேன் பயிற்சிக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் எவ்வளவோ வேலை இருந்தாலும் தனது உடலை பத்திரமாக பார்த்துக் கொள்ள பாக்சிங்கை சரியான நேரத்திற்கு செய்து வருகிறாராம் அது மட்டும் இல்லாமல் கரெக்ட் டயத்திற்கு சாப்பிட்டு விடுவாராம்.இதனை மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன் கூறியதை பார்த்தால் லோகேஷ் கனகராஜ் புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது ஒருவேளை அந்த திரைப்படத்திற்காக தான் லோகேஷ் கனகராஜ் பாக்சிங் கற்றுக் கொண்டு வருகிறாரா என பலரும் தங்களுடைய கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.