தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கிய திரைப்படங்களில் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை மறக்கவே முடியாது ஏனெனில் அந்த அளவில் மாபெரும் ஹிட் கொடுத்துவிட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் மணிரத்னம் ஷங்கர் முருகதாஸ் கௌதம்மேனன் சத்யராஜ் வசந்தபாலன் பாலாஜி சக்திவேல் ஆகிய அனைவரும் இணைந்து ரெயின் ஆன் தயாரிப்பு நிறுவனம். சார்பில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளதாகவும் மேலும் இத்திரைப்படத்தில் சூர்யா நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் சூர்யா கதாநாயகன் இல்லை விஜய் சேதுபதிதான் நாயகனாக இருப்பார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு மாசான வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்து ரசிகர்களை மிரட்டியிருப்பார். அதேபோல மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக விஜய் சேதுபதிக்கும் லோகேஷ் கனகராஜ் இருக்கும் ஒரு நெருங்கிய நட்பு உருவாகி விட்டது.
அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தில் எந்த ஒரு டேக்கையும் ரீ டேக் எடுக்காமல் நடிகர் விஜய்சேதுபதி நடித்து கொடுத்திருந்தார். இவ்வாறு விஜய் சேதுபதி செய்தது தன்னுடைய அடுத்த படத்திற்கு பிள்ளையார் சுழியாக அமைந்ததாக கூறப்படுகிறது.