தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் சமீபத்தில் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படத்துடன் மோதிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது கிடையாது என்ற வகையில் சரிக்கு சமமாக வசூல் சாதனை படைத்து வருகிறது.
வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கப்பட்ட நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வாரிசு படம் வெளியான உடனே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று லோகேஷ் கூறியிருந்தார்.
பின்னர் வாரிசு படம் வெளியான பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிக்கையாளர் கேட்கும் போது இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார் இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், திரிஷா, மிஸ்கின், ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு 50 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிடுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஜனனி தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் கமல் அவர்கள் ஜனனியிடம் கேட்கும் போது தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பதை ஓபன் ஆக ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பகத் பாஷிலிடம் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுள்ளார்கள் அதற்கு பதில் அளித்த பகத் பாசில் தளபதி 67 திரைப்படம் எல் சி யூ வில் இணைகிறது அதனால் நான் அதில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறியுள்ளாராம்.
விக்ரம் படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களையும் மக்களையும் தனது பக்கம் இழுத்தவர் பகத் பாஸில். அது மட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் இவருடைய கதாபாத்திரம் தான் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து தளபதி 67 இவர் இணைவது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
Fahadh: Its part of LCU… So I may be…#Thalapathy67
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 22, 2023