படத்தை இயக்குவதை தாண்டி தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்.! அதுவும் முன்னனி நடிகர்களை வைத்து… எல்லாம் காசு பார்க்க தான்

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும். ஒரு சில இயக்குனர்கள் தான் தோல்வி திரைப்படங்களை கொடுக்காமல் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்  அந்த வகையில் தோல்வியை காணாத இயக்குனர் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தன.

அந்த வகையில் மாநகரம்,  மாஸ்டர், கைதி, விக்ரம், என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து உள்ளார். அதேபோல் இவர் இயக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு நிலவு வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அவர் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யார் திரைப்படத்தை இயக்கப் போகிறார் எந்த நடிகரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களிடமும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

தளபதி விஜய் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது அதற்காக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் படங்களை இயக்கிய வெற்றி கண்டு பிறகு தற்பொழுது படத்தை தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சொந்தமாக படங்களை தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அவருடைய நெருங்கிய நண்பரான ரத்தினகுமாரி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் சீயான் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தையும் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதேபோல் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷன் கனகராஜ் அவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் தான் இயக்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.