நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல்லித்து சாதனை படைத்து வருகிறது இதனை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் அஜித்தை வைத்து ஒரு மாஸ் படம் எப்படி கொடுப்பார் என்று குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது ஏனென்றால் இதுவரைக்கும் கமர்சியல் படங்களை மட்டுமே கொடுத்து வந்த விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ஒரு மாஸ் படம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏ கே 62 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 63 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் குமார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏகே 63 திரைப்படம் எல்சியு-வில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களை எல்லாம் லோகேஷ் யூனிவர்ஸ் மூலம் உருவாக்கி வருகிறார் அந்த வகையில் ஏகே 63 திரைப்படமும் எல் சி யூ வில் இணைய இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது அது மட்டுமல்லாமல் ரோலக்ஸ் மற்றும் ராய்ஸ் இருவருக்கும் அஜித் மூத்த அண்ணனாக இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வந்து போதை பொருள் சாம்ராஜ்யத்தின் ஆணிவேராக நடித்திருப்பார் அதேபோல தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் துப்பாக்கிகளை டீல் செய்யும் கூட்டத்தின் தலைவனாகவும் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டும் அல்லாமல் இவர்களுக்கு அண்ணனாக தான் அஜித் தாய்லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஆயுர்வேத மெடிசன் மற்றும் எண்ணெய் டீலிங் செய்யும் கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஏ கே 63 படத்தில் அஜித் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய வெறித்தனமான நடிப்பு அவர்களுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது யூகித்து வருகிறார்கள். மேலும் விக்ரம் படத்தை விட ஏ கே 63 திரைப்படம் பயங்கர கேங்ஸ்டர் படமாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஏகே 62 திரைப்படத்தை விட ஏகே 63 திரைப்படத்தை பற்றிய தகவல் தான் தற்போது அதிகம் பரவி வருகிறது.