Lokesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர். நடிகர் விஜயயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து 171 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த திரைப்படத்தில் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். அன்பறிவு சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ரஜினி நடிக்கும் 171 வது திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் லொகேஷன் கனகராஜ்.
அன்பறிவு இயக்கும் இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இருவரும் நடிக்க இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் தான் தொடங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்குவதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார் ஆனால் திடீரென படத்தில் நடிக்கிறேன் என நடிப்புக்குள் வருவது ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
ஏனென்றால் பல இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் தங்கள் சிறப்பாக செய்து வந்த செயலை விட்டு விட்டு நடிப்பிற்குள் வந்து பெரிதாக சாதிக்க முடியாமல் தவிர்த்து வருகிறார்கள் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் ஜி வி பிரகாஷ் குமார் இதற்கு முன்பு நல்ல இசையமைப்பாளராக இருந்தவர் ஆனால் தற்பொழுது நடிகராக வந்து பெரிதாக சாதிக்கவில்லை.
அதேபோல் சசிகுமார் அவர்களும் இயக்குனராக இருந்து நடிகனாக மாறியவர் அது மட்டும் இல்லாமல் இப்படி பல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துள்ளார்கள் அந்த லிஸ்டில் தற்பொழுது லொகேஷன் கனகராஜ் அவர்களும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட் ஆக இருக்கிறது.