பிரபல நடிகை மீது பைத்தியமாக இருக்கும் லோகேஷ் கனகராஜ்..! அதற்காக இந்த அளவிற்கா..?

lokesh
lokesh

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு அதில் மிக பிரம்மாண்டமாக பயணித்து வரும் ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் தான் அந்த வகையில் இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் அமைந்து விடுகிறது.

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருப்பதன் காரணமாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் இவர் முதன்முதலாக மாநகரம் என்ற திரைப்படத்தை தான் இயக்கியிருந்தார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக்கை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விஜய் பாணியில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெகு நாளாக தனது ஆசை நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த லோகேஷ் க்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷன் மவுஸ் மாறிவிட்டது.

பொதுவாக லோகேஷ் கனகராஜுக்கு கமல் என்றால் மிகவும் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் கமல்தான் லொகேஷ்க்கு ரோல் மாடல் என்று சொல்வார். அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் நடிக்க உள்ள 67வது திரைப்படத்தையும் லோகேஷ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதில் முதலில் சமந்தா தான் கதாநாயகி என ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள்.

ஆனால் லோகேஷ் க்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது திரிஷா தான். அந்த அளவிற்கு லொகேஷுக்கு திரிஷா மீது  பைத்தியமாம். இதனால்தான் இயக்கப் போகும் தளபதி 67 வது திரைப்படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் இதுவும் நல்ல ஜோடி தான் என ரசிகர்கள் அவருக்கு  ஆறுதல் தெரிவிப்பது மட்டுமில்லாமல் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைவதன் காரணமாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.