தளபதி 67 திரைப்படத்திற்கான வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.! அப்டேட் கொடுத்த இயக்குனர்..

thalapathy-67
thalapathy-67

தென்னிந்திய சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் இவருடைய படங்களில் கதைகள் சரியில்லை என்றால் கூட படம் வசூலில் பட்டையை கிளப்பி விடும். அப்படி ரசிகர்களிடம் கலவையாக விமர்சனத்தை பெற்று வசூலில் பட்டைய கிளப்பிய திரைப்படம் பீஸ்ட்.

இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வாரிசு திரைப்படம் விஜயின் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் இரண்டாவது முறையாக தற்போது தளபதி 67 திரைப்படம் உருவாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்தது. விரைவில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாரிசு படம் பார்த்து முடித்த உடனே வெளியே வரும் போது பேட்டி எடுத்த பத்திரிகையாளர்களிடம் இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறியிருந்தார்.

தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தளபதி 67 குறித்து ஒரு பரபரப்பான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார் அதாவது எனக்கும் நடிகர் விஜய்க்கும் தளபதி 67 திரைப்படத்தில் பரபரப்பான ஒரு சண்டை காட்சி இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் யூத் படத்தில் பார்த்த அதே விஜய்யை தான் தற்போதும் நான் பார்க்கிறேன். அது மட்டுமல்லாமல் யூத் படத்தில் இருக்கும் விஜய்யை விட இந்த படத்தில் இளமை மாறாமல் இருக்கிறார் என்று கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.