தலைவரே ஆரம்பிக்கலாமா விக்ரம் திரைப்படத்தின் அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.!

kamal

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல திரைப்படங்களில் பிரபல இயக்குனர்களுடன் போட்டி போட்டு இயக்கிவரும் இயக்குனர் என்றால் அது  லோகேஷ் கனகராஜ் தான் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் மேலும் இந்த திரைப்படத்திற்கு கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராக சத்தியன் சூரியன் பணியாற்ற உள்ளாராம் இந்த படத்திற்கான டீசர் டைட்டில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டாவது வெளிவராதா என கமல் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டதால் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் புதிய அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆம் கமலுடன் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இன்று முதல் விக்ரம் திரைப்படம் தொடங்க இருக்கிறது மேலும் ஆரம்பிக்கலாமா விக்ரம் என பதிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

மேலும் இவர் பகிர்ந்த பதிவானது தற்போது கமல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.