தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இவருடைய 67வது திரைப்படத்தை தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த படத்திற்கு தற்பொழுது தளபதி 67 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த ஏராளமான தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தில் வில்லன்களாக மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதமேனன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும் இவர்களை தொடர்ந்து திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய மூன்று முன்னணி நடிகைகளும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இவ்வாறு சூப்பர் ஹிட் பெற்ற இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து இவர் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்பொழுது வரும் என காத்திருந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என கூறியிருக்கிறார் மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியாகும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
தற்பொழுது தளபதி 67 படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய இவர் மேலும் தான் கைதி படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தளபதி 67 படத்தை முடித்தவுடன் கைது படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
#EXCLUSIVE | ‘டிசம்பரில் தளபதி 67 அப்டேட் வரும்' – லோகேஷ் கனகராஜ்#SunNews | #Thalapathy67 | #Kaithi2 | @Dir_Lokesh pic.twitter.com/UU1C9ePZeV
— Sun News (@sunnewstamil) October 26, 2022