நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தான் வாரிசு தற்பொழுது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த படத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை வைத்து ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ் இவருடைய இயக்கத்தில் சில திரைப்படங்கள் மட்டுமே வெளி வந்திருந்தாலும் அந்த அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
அந்த வகையில் முக்கியமாக கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் கூட்டணியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் எதிர்பாராத அளவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்த நிலையில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
இவ்வாறு நடிகர் விஜயின் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் மூலம் இந்த நிறைவான திருப்தியை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடந்த மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார்.
அதில் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் கேட்ட நிலையில் அதற்கு லோகேஷ் கனகராஜ் சின்ன ஹிண்டு தருவதாக கூறி பிப்ரவரி 1,2,3 என கூறியிருக்கிறார். எனவே இந்த தேதிகளில் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Watch | கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடந்த ‘மைக்கேல்’ படத்தின் ப்ரொமோஷன் விழாவில், ’தளபதி 67’ படம் குறித்து Hint கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!#SunNews | #Thalapathy67 | #LokeshKanagaraj | @Dir_Lokesh | @actorvijay pic.twitter.com/MfuiSakfVq
— Sun News (@sunnewstamil) January 25, 2023