வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருவதால் ரசிகர்கள் பலரும் இவரது திரைப்படங்களை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் கூற வேண்டும் என்றால் இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக மிரட்டலாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் வெளியான போது வசூலில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்று ரசிகர்களிடையே அதிக நாட்கள் ஓடியது.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பல சினிமா பிரபலங்களை நடிக்க வைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ் அந்த வகையில் பார்த்தால் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு நடிகர் வாய்ப்பு கேட்டு அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை இவரால் கொடுக்க முடியவில்லை என்று வருத்தப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் இந்த நடிகரை நடிக்க வைப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியதாக தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.
ஆம் மாஸ்டர் திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஒப்பந்தமாகி பின்பு ஒரு சில பிரச்சனையால் இந்த திரைப்படத்தை நழுவவிட்ட நடிகர் தான் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் மாஸ்டர் திரைப்படத்தில் ஆரம்பத்தில் இணைந்து கால்ஷீட் பிரச்சினையால் ஒதுங்கி விட்டார் என பலரும் கூறினார்கள் ஆனால் லோகேஷ் கனகராஜிக்கு இது மன வருத்தத்தை கொடுத்து விட்டதாம்.
இந்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது அதுமட்டுமல்லாமல் கமல் நடிக்கும் இந்த திரைப்படத்தில் இவர் இணைந்ததால் நல்லா இருக்கும் என ரசிகர்களும் கூறி வருகிறார்கள் ஆனால் இதனை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.