படம் தான் பிரமாண்டம்ன்னு பார்த்தா லோகேஷ் வாங்குன காரும் பிரமாண்டமா.! எத்தனை கோடி தெரியுமா.?

lokesh kanagaraj
lokesh kanagaraj

Lokesh Kanagaraj : “மாநகரம்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் லோகேஷ் கனராஜா அவர்கள் தமிழ்த்திரையில் அறிமுகமானார். இவர் தமிழில் பல வெற்றி படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பயங்கர ஹிட் ஆனது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இப்படம் வெற்றியடைந்ததில் காலுக்கும் சந்தோஷம்தான். இதனைக் கொண்டாடும் வகையில் நடிகர் கமல் இப்படி வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி சொல்லும் விதமா ஒரு லெக்சரி காரை பரிசாக கொடுத்தார். இந்தக் காரின் மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் ஆகும்.

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய லியோ என்ற அதிரடி திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது, எஸ் எஸ் லலித் குமார் தயாரிப்பில் இளையதளபதி விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் அனிருத் இசையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியில் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் “லியோ’ படத்தை சிறப்பாக இயக்கி முடித்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் தற்போது புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த கார் நடிகர் கமல் இவருக்கு பரிசாக கொடுத்த காரின் மதிப்பை விட இரண்டு மடங்கு பட்ஜெட்டில் வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 1.70 கோடியாகும்.

லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த கார் ஸிரோவில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் கடந்து விடுமாம். ஸ்மார்ட் போன் மூலமாக இந்த காரை ஸ்டார்ட் பண்ணவும் அன்லாக் செய்யவும் முடியுமாம். இந்த கார் ஒரு லிட்டருக்கு 12.61 மைலேஜ் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.